உத்தரகாண்ட் சுரங்க விபத்து: குழாய் மூலம் உணவுகள்.. மீட்பு பணியில் பெரும் பங்கு வகித்த தமிழக நிறுவனம்
ராஞ்சி: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து மீட்பு பணியில் தமிழக நிறுவனமும் பெரும் பங்கு வகித்து வருகிறது. சுரங்கத்திற்குள் கிச்கியுள்ள தொழிலாளர்களுக்கு 6 இஞ்ச் குழாய் மூலம் உணவுகள் சுரங்கப் பாதைக்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. திருச்செங்கோடு தரணி ஜியோ டெக் நிறுவனத்தினர் இந்த குழாய்களை அமைத்து தந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர்.

மொத்தம் 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 150 மீட்டர் தொலைவுக்கு மண்சரிவு ஏற்பட்டதால், 41 தொழிலாளர்களால் சுரங்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தொடங்கியது. மத்திய, மாநில அரசுகள் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகளை தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டவர்கள் மீட்பு பணியை தொடங்கினர்.
மீட்பு பணி: சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் இந்த மீட்பு பணி பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வருகின்றனர். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்த நிலையில், சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் பத்திரமாக இருக்கும் வீடியோவை மீட்புக் குழு வெளியிட்டது.
திருச்செங்கோடு: சுரங்கத்தில் 4,800 எம்எம் அளவு கொண்ட பைப் செலுத்தப்பட்டுள்ளது. வெறும் ஒரு சில மீட்டர்கள் தூரம் மட்டுமே எஞ்சியிருப்பதால் இன்னும் சில மணி நேரத்தில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மீட்பு பணியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனத்தின் பங்கு பெரிய அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ் பெற்ற ரிக் தயாரிப்பு நிறுவனம், பி.ஆர்.டி ஜிக் 5 என்ற ரிக் இயந்திரத்தை தயாரித்துள்ளது. இந்த இயந்திரம் கடுமையான பாறைகளையும் உடைக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரத்தை ரூ.85 லட்சம் கொடுத்து திருச்செங்கோடு மண்டக பாளையம் பகுதியை சேர்ந்த தரணி ஜியோடெக் என்ற நிறுவனம் மலைகளை உடைத்து சுரங்கப் பாதைகளை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தி வருகிறது.
ஆக்சிஜன், உணவு: இந்த நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர், தொழிலாளர்களுக்கு உணவு ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை எப்படி அளிப்பது என்பது குறித்து யோசித்து வந்தனர். அதன் பிறகுதான் தரணி ஜியோடெக் நிறுவனத்தை மீட்புக்குழுவினர் அணுகினர். 6 அடி அகலத்தில் சுமார் 170 அடி ஆழத்தில் துளை அமைத்து சிமெண்ட்ரி தொழில் நுட்பம் மூலம் துளை அமைத்து செல்லும் போது கேஸ்லின் பைப்பையும் உள்ளே அனுப்பினர்.
அதன் மூலம் சரிவு எதுவும் ஏற்படமால் குழாய் உள்ளே அனுப்பப்பட்டது. இந்தக் குழாய் வழியே சுரங்த்திற்குள் சிக்கியுள்ளவர்களுக்கு ஆக்சிஜன், உணவு, மருந்து உள்ளிட்டவற்றை அனுப்பி வருகிறது. இதனால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் மாற்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீட்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரும் மீட்கப்பட உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications