எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு சோதனை - பின்னணி என்ன?
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலுமணி விவகாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது சோதனையாகும்.
கோயம்புத்தூரின் மைல்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு இயக்குநரக ஆய்வாளர் எழிலரசி பதிவு செய்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா அன்பரசன், உறவினர் சந்திரசேகரன் மற்றும் நண்பர்கள் 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வேலுமணி மற்றும் உறவினர்களின் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலமும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சொத்து, நகை சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னை, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இது தொடர்பான விரிவான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிற செய்திகள்:
- இந்திய ஏவுகணை சம்பவம்: "திருப்பி அடித்திருப்போம், கட்டுப்படுத்திக் கொண்டோம்" - இம்ரான் கான் நடிகர் அஜித் மீது உருவக் கேலியா? பதில் கொடுத்த மேலாளர் - நடந்தது என்ன?
- ஸ்டாலின் உத்தரவுக்குக் கட்டுப்படாத திமுகவினர்; கொதிக்கும் கூட்டணிக் கட்சியினர்
- பாலுறவு இன்பத்தை 40 வயதுக்குப் பிறகு அதிகரிப்பது எப்படி? - நிபுணரின் விளக்கம்
- யுக்ரேன் உள்ள வீரர்களுக்காக சீனாவிடம் ஆயுதம் கேட்டோமா? ரஷ்யா விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?













Click it and Unblock the Notifications