டெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்திய வைகோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமராக பொறுபேற்க உள்ள மோடிக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்க உள்ளார். அவரை வைகோ டெல்லியில் சந்தித்தார்.

வைகோ வாழ்த்து
மோடியை நேரில் சந்தித்த வைகோ, பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

அணைத்த மோடி
இந்த சந்திப்பின் போது வைகோவை கட்டியணைத்த நரேந்திரமோடி அவருடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.

நதிகள் இணைப்பு
அப்போது நரேந்திர மோடியிடம் பேசிய வைகோ நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினார்.

தென்னக நதிகள்
முதல் கட்டமாக தென் இந்திய நதிகளை இணைக்க வைகோ வலியுறுத்தினார். நதிகள் இணைப்பு பிரச்சனையை கவனிப்பதாக மோடி உறுதியளித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications