மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கறுப்புக் கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம்
திருப்பதி: பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும், அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நேற்று திருப்பதி வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய மதிமுக, த.வா.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய ஆந்திர போலீசார், அவர்களைக் கைதும் செய்தனர்.

இந்த சம்பவத்தைப் படம் பிடிப்பதற்காக சென்ற தமிழக செய்தியாளர்களைத் தாக்கிய ஆந்திர போலீசார், கேமரா, செல்போன் உள்ளிட்ட அவர்களின் உபகரணங்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், 10க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் வனப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர்.
இந்நிலையில், ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ கூறியதாவது :-
முன்பு ராஜபக்சேவுக்கு மட்டும் தான் கறுப்புக் கொடி காட்டுவோம் எனக் கூறி இருந்தோம். காரணம் அப்போது நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தோம். ஆனால், தற்போது அப்படியில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். தன்மானத்தோடு வாழ்கிறோம்.
இப்போது கூறுகிறேன், ராஜபக்சேவை ஆதரிக்கும் பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என் தலைமையில் அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications