அடுத்த சில நாட்களில் வாஜ்பாய் முழுமையாக குணமடைவார் என நம்புகிறோம்.. எய்ம்ஸ் அறிக்கை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அடுத்த சில நாட்களில் அவர் முழுமையாக குணமடைவார் என நம்புவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
93 வயதான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 11 ஆம் தேதி திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பொது மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.
பின்னர், சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக வாஜ்பாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எய்ம்ஸ் அறிக்கை
இந்நிலையில் வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

வாஜ்பாய் உடல்நிலை
வாஜ்பாயின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 48 மணி நேரத்தில் வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை
அடுத்த சில நாட்களில் வாஜ்பாய் முழுமையாக குணமடைவார் என நம்புவதாக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டயாலிஸிஸ்
மேலும் வாஜ்பாய்க்கு மிகக்குறைவாக சிறுநீர் வெளியேறியதாகவும் அவருக்கு மெதுவான டயாலிஸிஸ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications