காங்கிரஸில் சேர்ந்தார் வாஜ்பாய் உறவுப் பெண்
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் உறவுப் பெண்ணுமான கருணா சுக்லா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
63 வயதான கருணா சுக்லா, சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.ஆவார். மாநில மகளிர் அணித் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
கட்சி மீது அதிருப்தியுடன் இருந்து வந்தார் கருணா சுக்லா. எந்த முடிவிலும் தன்னை கட்சித் தலைவர்கள் ஆலோசிப்பதில்லை என்றும் கூறி வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென காங்கிரஸில் போய்ச் சேர்ந்து விட்டார்.
ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் என்பதால் அதில் இணைய முடிவு செய்ததாக சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் வாஜ்பாய் விலகிய பிறகு பாஜகவின் போக்கு சரியில்லை என்றும் கருணா சுக்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications