காதலர் தினம்: "சிங்கிள் பாய்ஸ்களை" தனது ஸ்டைலில் வாழ்த்திய நாகலாந்து அமைச்சர்! நெட்டிசன்கள் கலகல
ஹோகிமா: காதலர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அது குறித்த பதிவுகள் குவிந்து கிடக்கும் நிலையில், சிங்கிள் பாய்ஸ்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவரான நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நாகலாந்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் டெம்ஜென் இம்னா அலோங். அந்த மாநில உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராகவும் டெம்ஜென் இம்னா அலோங் இருக்கிறார்.
நாகலாந்தில் வரும் 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் ட்விட்டரில் தனது வழக்கமான ஜாலியான பதிவுகளை போட்டு நெட்டிசன்களையும் டெம்ஜன் இம்னா கலகலப்பாக்கி வருகிறார்.

டெம்ஜென் இம்னோ அலோங்
வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த டெம்ஜன் இம்னா அலோங் அந்த மாநில மக்களுக்கு உரிய பிரத்யேக முக அமைப்பை கொண்டவர். சற்று குண்டாகவும் சிறிய கண்கள் கொண்டவராகவும் டெம்ஜென் இம்னா அலோங் இருப்பார். தனது உடல் அமைப்பை கேலி செய்பவர்களுக்கு கூட தனது பாணியில் ரசிக்க வைக்கும் வகையில் ட்விட்களை பதிவிட்டு நெட்டிசன்களை டெம்ஜென் இம்னோ அலோங் கவர்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவராக அறியப்படும் டெம்ஜென் இம்னாவிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

சிங்கிளாக இருப்பது பற்றி
டெம்ஜென் இம்னாவின் பதிவுகள் பெரும்பாலும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவும். 42-வயதான டெம்ஜென் இம்னா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அடிக்கடி சிங்கிளாக இருப்பது பற்றி மிகவும் ஜாலியாக டெம்ஜென் இம்னா பதிவிட்டு வருவார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ''நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள், பிரபலத்தை போல உணர்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த
அதேபோல், கடந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு டெம்ஜென் இம்னா தனது ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பதிவும் இணையத்தில் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது. அதாவது, "மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னைப் போலவே சிங்கிளாக இருங்கள் என்றும் டெம்ஜென் இம்னா பதிவிட்டு கலாய்த்து இருந்தார். இப்படி பல முறை மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் டெம்ஜென் இம்னா அலோங் தனது ட்விட்டரில் பதிவிட்டு வருவதுண்டு.

வாழ்க சிங்கிள்ஸ் என ட்விட்
அவ்வப்போது சிங்கிளாக இருங்கள் என வேடிக்கையாக பதிவிடும் டெம்ஜென் இம்னா அலோங்..உலக காதலர் தினமான இன்று சும்மா இருப்பாரா என்ன? தனக்கே உரிய ஸ்டைலில் டிவிட்டை பதிவிட்டு நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளார். டெம்ஜென் இம்னா அலோங் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- ''சுதந்திரம் என்பது ஒரு பரிசு.. அனைவருக்கும் பொருந்தாது. நமது நாளை கொண்டாடுவோம். வாழ்க சிங்கிள்ஸ்!" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கலகல கருத்து
டெம்ஜென் இம்னா அலோங்கின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 90 கிட்ஸ்களுக்கு ஆறுதல் அளிப்பது போல டெம்ஜன் இம்னாவின் பதிவு இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் சொல்லாத குறைதான். அந்த அளவுக்கு பலரும் டெம்ஜன் இம்னாவின் பதிவிற்கு மிகவும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சில நெட்டிசன்கள், "நீங்கள் கொடுக்கும் எக்ஸ்பிரெசன் தான் அருமையாக உள்ளது" என்ற ரீதியில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், காதலர் தினத்தன்று சிங்கிள் பாய்ஸ்களுக்க்கு ஆறுதல் அளிப்பது போல உங்கள் பதிவு இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications