அசத்தும் வந்தே பாரத்.. ஜோலார்பேட்டைக்கும் வருகிறது.. அதைவிடுங்க.. திருப்பத்தூருக்கு ரயில் நிறுத்தமா?
திருப்பத்தூர்: வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டைக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இன்றைய ரயில் பயணம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டன. அதாவது, இதுவரை பயணிகள் இந்த ரயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது.
இப்போது, வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும், மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக, வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகளும் ரயில்வே துறை சார்பில் துரிதமாகியும் வருகிறதாம்..
ஜோலார்பேட்டை: அதன்படி, அரக்கோணம்- ஜோலார் பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக, இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதமே நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஜோலார்பேட்டை: இந்நிலையில், ஜோலார்பேட்டை ரயில் சேவை குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.. அதாவது, ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை இடையே உள்ள ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணி இன்று அதாவது திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது... இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். எனவே, ரெயில் இன்றைய நாள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

ஈரோடு: இதேபோல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது... இந்த ரெயிலும் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக, சதாப்தி ரயிலுக்கு, ஜோலார்பேட்டையில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.. அதாவது, கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலானது, ஜோலார்பேட்டையில் நிறுத்துவதில்லை. முக்கிய வழித்தடமான ஜோலார்பேட்டையில், ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாகவே, தொடர்ந்து வலியுறுத்தபடியே இருந்தனர்..
எல்.முருகன்: இதை ரயில்வே வாரியம் தற்போது ஏற்றுள்ளது.. வரும் ஜூலை 9ம் தேதி முதல் சதாப்தி ரயில், இரு மார்க்கங்களிலும் தலா ஒரு நிமிடம் நின்று செல்லுமாம்.. இந்த சேவையை, மத்திய இணை அமைச்சர் முருகன், வரும் 9ம் தேதி துவங்கி வைக்க உள்ளார் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications