வந்தே பாரத் ரயில் ஸ்பெஷல்.. டெல்லி டூ டேராடூன் எக்ஸ்பிரஸ் ஓட துவங்கியது.. நனவாகும் பிரதமர் மோடி கனவு
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி... இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.
கனவு திட்டம்: இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார்.அ தன்படிதான் இன்றைய தினமும் தொடங்கி வைத்துள்ளார்.. உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் முழுவதுமான மின் மயமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வந்தே பாரத் ரயில் அம்மாநில ரயில் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வீடியோ கான்பரன்ஸ்: காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்துள்ள இரண்டாவது ரயில் சேவை இதுவாகும். முன்னதாக கடந்த 18ம் தேதி ஒடிசாவின், பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்திருந்தார். இதனையடுத்து இன்று இரண்டாவது முறையாக காணொலி வாயிலாக இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.. இந்த ரயில் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியிலிருந்து டெல்லி வரை பயணிக்கிறது.
செமி-ஸ்பீடு வரிசையில் இயக்கப்படும் 6வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். டேராடூனுக்கும், டெல்லிக்கும் சுமார் 314 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் 7 ரயில்கள் இதுவரை இயக்கப்பட்டு வருகிறது.
ஸ்பெஷாலிட்டி: இந்த ரயில்கள் 413 கி.மீ தொலைவை கடக்க சுமார் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் தொடங்கி, 9 மணி நேரம் 55 நிமிடங்கள் வரை ரயில்கள் எடுத்துக்கொள்கின்றன. எனவே இந்த பயண நேரத்தை குறைக்க வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் 314 கி.மீ தொலைவை, வெறும் 4 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து விடும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications