ஆந்திராவை நோக்கி நகரும் ‘வர்தா’ புயல் - டிச.12 இல் நெல்லூர் அருகே கரையை கடக்கும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 12ம்தேதி நெல்லூர் காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ம
டெல்லி/சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 12ல் நெல்லூர் காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால் வரும் 11ஆம் தேதி முதல் அங்கு பலத்த மழை பெய்யும், கடலில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு வர்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயலானது விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அந்த மான் நிக்கோபர் தீவுகளின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இதனால், 11ஆம் தேதி முதல் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும். கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், வங்கக்கடலில் உருவான புயல் நெல்லூர் - காக்கிநாடா இடையே 12ஆம் தேதி முற்பகல் கரையை கடக்கும் என்றார்.
விசாகபட்டினத்துக்கு தென்கிழக்கே 1060 கி.மீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் உருவாகி உள்ளதால் 10-ம் தேதி முதல் ஆந்திர கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் அண்மையில் உருவான நடா புயல் கடந்த 2ஆம் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுபுதுவை, காரைக்கால், கடலூர், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications