முடங்கிய ரயில் சேவை.. பஞ்சாப் விவசாயிகளின் 3 நாள் மறியல் தொடங்கியது! பின்னணி என்ன?
சண்டிகர்: பஞ்சாப் விவசாயிகள் இன்று முதல் 3 நாட்களுக்கான ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்றைய போராட்டத்தில் பல இடங்களில் இருந்து டிராக்டரில் விவசாயிகள் வந்து தண்டவாளத்தில் அமர்ந்து ரயிலை மறித்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி அரசு நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் பஞ்சாப்பில் கனமழை பெய்தது. இதில் பல ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் முழுவதும் 3 நாள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தின் அறிவித்தனர். அதன்படி இன்று ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் இன்று நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்றைய போராட்டத்தில் விவசாயிகள் டிராக்டரில் போராட்ட களத்துக்கு வந்து தண்டவாளத்தில் அமர்ந்தனர். போலீசார் தடுக்க முயன்றாலும் அவர்கள் கேட்காமல் தண்டாவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் செய்தனர். இதனால் பல ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் என்பது பஞ்சாப்பில் நடந்து வருகிறது.
முன்னதாக இதுபற்றி கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், ‛‛மொத்தம் 19 விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்துக்கு முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்கும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இதுதவிர ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து சில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுக்க உள்ளனர். பஞ்சாபின் மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், ஜலந்தர், தர்ன் தரன், சங்ரூர், பாட்டியாலா, ஃபெரோஸ்பூர், பதிண்டா மற்றும் அமிர்தசரஸ் உள்பட மொத்தம் 12 இடங்களில் ரயில் மறியல் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பார்தி கிசான் யூனியன், பார்தி கிசான் யூனியன், ஆசாத் கிசான் கமிட்டி தோபா, பார்தி கிசான் யூனியன், பார்தி கிசான் யூனியன், பார்தி கிசான் யூனியன், கிசான் மகாபஞ்சாயத் (ஹரியானா), பக்ரி சம்பல் ஜட்டா (ஹரியானா) ஆகிய விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். மேலும் முற்போக்கு உழவர் முன்னணி (உத்தர பிரதேசம்), பூமி பச்சாவ் முஹிம் (உத்தரகாண்ட்) மற்றும் ராஷ்ட்ரிய கிசான் சங்கதன் (இமாச்சல பிரதேசம்) உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப்பில் இன்று முதல் 3 நாட்கள் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட உள்ளது. மேலும் ரயில் மறியல் போராட்டத்தை தடுக்கும் வகையில் பஞ்சாப்பில் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications