வாய்ப்பை மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியின் சிட்டிங் எம்பியான வருண் காந்திக்கு இந்த முறை போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில், 'எனது லோக்சபா உறுப்பினர் எனும் பயணம் நிறைவடைந்தது' என்று வருண் காந்தி கடிதம் எழுதி அதை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் மிக முக்கியமான மாநிலமாகும். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான லோக்சபா தொகுதிகள் இங்குதான் இருக்கின்றன. கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அனைத்து லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்ற கட்சி தீவிரமாக முயன்று வருகிறது. எனவே வேட்பாளர்களையும் பார்த்து பார்த்து அறிவித்து வருகிறது.

இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியின் சிட்டிங் எம்பியான வருண் காந்திக்கு இந்த முறை போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுக்கவில்லை. இது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாஜகவின் 5வது வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் சிட்டிங் எம்பியாக உள்ள 37 எம்பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தது. இந்த 37 பேரில் வருண் காந்தியும் ஒருவர்.
ஆனால், இவருடைய தாய் மேனகா காந்திக்கு மீண்டும் சுல்தான்பூரில் தொகுதியை பாஜக ஒதுக்கியிருக்கிறது. வருணுக்கு சீட் ஒதுக்காததால் அவர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிக்கு தாவிவிடுவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், மேனா காந்திக்கு சீட் கொடுத்து வருணை பாஜக சமாதானம் செய்திருக்கிறது.
இந்நிலையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பயணம் நிறைவடைந்தது என வருண் காந்தி உணர்ச்சி பொங்க கடிதம் எழுதி அதை வெளியிட்டிருக்கிறார். அதில்,
"பிலிபித் எம்பியாக என்னுடைய பதவி காலம் முடிவுக்கு வந்தாலும், இந்த தொகுதிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை என் இறுதி மூச்சு உள்ளவரை தொடரும். இந்த தொகுதி மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷடமாக கருதுகிறேன். பிலிபித் மக்களின் பிரதிநிதியாக இருந்தது எனது வாழ்க்கையின் கவுரம். எனவே என்னால் முடிந்தவரை தொகுதி மக்களின் நலனுக்காக அவர்களுடன் நிற்பேன்.
எம்.பி.யாக இல்லாவிட்டாலும், ஒரு மகனாக, என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன், என் கதவுகள் உனக்காக எப்போதும் திறந்தே இருக்கும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது எனக்கு 3 வயது இருக்கும். 1983ல் எனது தாய் மேனகா காந்தியுடன் நான் இங்கு வந்தேன். ஒரு நாள் இந்த நிலம் என்னுடைய பணியிடமாக மாறும், இங்குள்ள மக்கள் என்னுடைய குடும்பமாக மாறுவார்கள் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? பிலிபித்துக்கும் எனக்கும் இடையிலான உறவு அன்பும் நம்பிக்கையும் கொண்டது.
இந்த உறவு அரசியல் உறவுகளுக்கு அப்பாற்பட்டது. நான் இருந்தேன், இருக்கிறேன், இனியும் இருப்பேன்" என்று உணர்ச்சிப்பொங்க தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications