For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபச்சார அழகிகளை வைத்து வருண் காந்தியை மடக்கி பாதுகாப்பு ரகசியம் திருடப்பட்டதா? #varungandhi

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாட்டு அழகிகள், விபச்சார அழகிகளை வருண் காந்தியுடன் பழக விட்டு, அவர் நெருக்கமான தருணத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை வைத்து அவரை மடக்கி பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் திருடப்பட்டதாக பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க வழக்கறிஞர் எட்மாண்ட்ஸ் ஆலன் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேனகா காந்தியின் மகன்தான் வருண் காந்தி. உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் வருண் காந்தி மீது பெரும் புகார் கிளம்பியுள்ளதால் உத்தரப் பிரதேச அரசியலில் புயல் கிளம்பியுள்ளது. பாஜகவுக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது

வெளிநாட்டு அழகிகளை வைத்து வருண் காந்தி மடக்கப்பட்டதாக ஆலன் தகவல் தெரிவித்துள்ளார். ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா இந்த வேலையில் ஈடுபட்டதாகவும் ஆலன் தனது கடிதத்தில் கூறியுள்ளார். ஆலனும், வர்மாவும் பிசினல் பார்ட்னர்களாக இருந்தவர்கள். 2012ல் பிரிந்து விட்டனர்.

இதெல்லாம் சதி

இதெல்லாம் சதி

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை வருண் காந்தி மறுத்துள்ளார். இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு, இதற்கு எப்படி நான் பதிலளிக்க முடியும். பாதுகாப்புத் துறை தகவல்களை என்னால் எளிதில் பெற முடியாது. உ.பி. தேர்தலில் என்னை ஈடுபட விடாமல் தடுக்க நடக்கும் சதியே இது என்று அவர் கூறியுள்ளார்.

அழகிகளுடன் நெருக்கம்

அழகிகளுடன் நெருக்கம்

செப்டம்பர் 16ம் தேதி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆலன். அதில் அவர் கூறுகையில், ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா, வருண் காந்தியுடன் நட்பு கொண்டு அவரிடம் வெளிநாட்டு அழகிகள், விபச்சார அழகிகளைப் பழக விட்டார். பின்னர் வருண் காந்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ படமாக்கியம், புகைப்படம் எடுத்தும் வைத்துக் கொண்டு வருண் காந்தியை மிரட்டினார்.

லீக் ஆன தகவல்கள்

லீக் ஆன தகவல்கள்

இந்தப் படங்கள் வெளியாகாமல் இருக்க இந்தியாவின் பாதுகாப்புத்துறை தொடர்பான சில தகவல்கள் தனக்குத் தேவை என்று அவர் மிரட்டினார். இதனால் வேறு வழியில்லாமல் வருண் காந்தி அவர் கேட்ட தகவல்களை அவரிடம் கொடுத்துள்ளார். வருண் காந்தி, நாடாளுமன்ற பாதுகாப்புக் கமிட்டியில் உறுப்பினராக இருந்ததை வைத்து இந்தத் தகவல்களை கசிய விட்டுள்ளார் என்று கடிதத்தில் கூறியுள்ளார் ஆலன்.

கேலிக் கூத்து புகார்

கேலிக் கூத்து புகார்

ஆனால் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார் வருண் காந்தி. இதுகுறித்து அவர் கூறுகையில் இது முட்டாள்தனமான, கேலிக்கூத்தான புகார். இதற்கு நான் எப்படி பதிலளி்க முடியும். இந்தப் புகார்களுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. என்ன ஆதாரம் உள்ளது

15 வருஷமா பார்க்கவே இல்லை

15 வருஷமா பார்க்கவே இல்லை

நான் கடந்த 15 வருடமாக வர்மாவைப் பார்க்கவே இல்லை (தற்போது வருண் காந்திக்கு 36 வயதாகிறது). ஆலன் குறிப்பிட்டது போல எந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திலும் நான் கலந்து கொண்டதும் இல்லை. நான் அழகிகளுடன் இருப்பதாக கூறப்படும் எந்த புகைப்படமாக இருந்தாலும் அது நம்பகமானது அல்ல. போலியானதாகவே இருக்க முடியும். நான் உ.பி தேர்தலில் ஈடுபடக் கூடாது என்று தடுக்க நினைப்போரின் சதிதான் இது என்று வருண் கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் பாஜக

அதிர்ச்சியில் பாஜக

உ. பி சட்டசபைத் தேர்தலில் வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜகவினரில் ஒரு பிரிவினர் தொடர்ந்து கோரி வருகின்றனர். இந்த நிலையில் வருண் காந்தி மிகப் பெரிய குற்றச்சாட்டு அமெரிக்காவிலிருந்து வந்துள்ளதால் உ.பி பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மிரட்டவில்லை

மிரட்டவில்லை

இதற்கிடைய சர்ச்சைக்குரிய ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மாவும், ஆலனின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வருண் காந்தியை புகைப்படம் எடுக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை, எந்தத் தகவலையும் பெறவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கடற்படை ஊழலில் சம்பந்தப்பட்ட வர்மா

கடற்படை ஊழலில் சம்பந்தப்பட்ட வர்மா

இந்த வர்மா கடந்த காலத்தில் பெரும் புயலைக் கிளப்பியவர். அவருக்கு எதிராக ஆலன் பல முக்கியத் தகவல்களை வெளியிட்டார். அவரது முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். இந்திய விசாரணை அமைப்புகளிடம் பல முக்கிய ஆவணங்களையும் ஒப்படைத்தார். இதையடுத்து அபிஷேக் வர்மா கைது செய்யப்பட்டார். கடற்படை ரகசியங்களை கசிய விட்ட வழக்கிலும் அவர் முக்கியமாக சிக்கினார். பல முக்கிய வழக்குகளிலும் இவரது பெயர் சேர்க்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட வர்மா பின்னர் ஜாமீனில் விடுதலையானார். ஆனால் வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது.

English summary
Varun Gandhi the Son of union minister Menaka Gandhi is in a big truoble. A letter from an US based lawyer Allen to the PM Modi alleges that VarunGandhi was honey-trapped by arms dealer Abhisekh Verma and Varun leaked defence datas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X