லலித் மோடிக்கு பத்ம விருதுகள் வழங்க வசுந்தரா ராஜே பரிந்துரை? அரசியலில் கொளுத்தப்பட்ட அடுத்த குண்டு..
டெல்லி : ஐ.பி.எல். முறைகேட்டில் அமலாக்கத்துறையால் தேடப்பட்டு வரும் லலித் மோடிக்கு பத்ம விருதுகள் வழங்க ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கடந்த 2007-ம் ஆண்டு பரிந்துரை செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருந்து வெளியாகும் நாளிதழில் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நாளிதழில் வெளியான செய்தியில், கடந்த 2007-ம் ஆண்டு லலித் மோடிக்கு பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே, விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

லலித் மோடியின் பங்களிப்பால் ராஜஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சியடைந்ததாகவும், 6 ஐ.பி.எல். போட்டிகளை ராஜஸ்தானில் நடத்த லலித் மோடி எவ்வாறு உதவினார் என்பதும் அந்த பரிந்துரை கடித்ததில் வசுந்தரா ராஜே தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து குடியுரிமை பெற லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.
இந்த நிலையில் லலித் மோடிக்கு பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என்று வசுந்தரா ராஜே பரிந்துரை செய்ததாக செய்தி வெளியாகி இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
