'அசைவ' முட்டையை சத்துணவில் சேர்க்க தடை விதித்த ம.பி. முதல்வர் 'சைவ' சவுகான்!
போபால்: அசைவமான முட்டையை குழந்தைகளுக்கான சத்துணவில் சேர்க்கக் கூடாது என்று சைவப் பிரியரான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தடை விதித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அலிராஜ்பூர், மண்ட்லா, ஹோசன்காபாத் மாவட்டங்களில் சோதனை முறையில் முட்டையை சேர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் மதிய உணவில் முட்டையை சேர்க்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். முட்டையில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் இருப்பதால் வாரம் இருமுறை முட்டையை சேர்க்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய் வராது என்றும் அதில் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானோ சைவப்பிரியர் என்பதால் அவர் முட்டை 'அசைவம்' என்று கூறி அதிகாரிகளின் யோசனையை ஏற்க மறுத்து விட்டார். முட்டைக்குப் பதிலாக கர்ப்பிணிகளுக்கும், மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துமிக்க பால் வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications