ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு
டெல்லி: கோவை அருகே ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் வயது 80. கணவரை இழந்த இவர் முதுமையிலும் தன் உழைப்பில் வாழந்து வருகிறார். இந்த மூதாட்டி கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். ஆரம்பித்தில் 50 பைசாவுக்கு இட்லி விற்று வந்த கமலாத்தாள், கடந்த 15 வருடங்களாக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.

இவர் பிளாஸ்டிக் காதிகங்களோ அல்லது பிளாஸ்டிக் பைகளையோ பயன்படுத்துவதில்லை. வீட்டில் இருந்து பாத்திரம் கொண்டுவந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார். இவரது கடைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் இட்லி வரை சுட்டு ஒரு ரூபாய் விலையில் இன்றும் விற்று வருகிறார்.
I salute 80 year old Smt Kamalathal from vadivelampalayam, #TamilNadu for her Noble service of selling Idlis at 1 rupee to daily wage workers.
— VicePresidentOfIndia (@VPSecretariat) September 14, 2019
Her story inspires one and all.
My salutations to her. pic.twitter.com/9oDcxJtD83
கமலாத்தாளின் சேவை குறித்து செய்திகள் ஊடகங்களில் கடந்த வாரம் செய்திகள் வெளியான நிலையில் பலரும் பாராட்டி வருகிறார்கள். அவருக்கு நிறைய பேர் உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கமலா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். அவரது வீடு ஓழுகி வருவதை அறிந்த கலெக்டர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுந்த உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை கேட்டு கமலாத்தாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்
இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கமலாத்தாள் பாட்டிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 80 வயதான கமலாத்தாள், தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இட்லியை 1 ரூபாய்க்கு விற்கும் அவரின் உன்னத சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய பணி அனைவரையும் ஊக்குவிப்பதாக உள்ளது. அவருக்கு எனது வணக்கங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications