தமிழகம், புதுவையில் இன்று முதல் நவ.2 வரை மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாக ஒரு வாரம் கழித்து தொடங்கியுள்ளது.
இருப்பினும் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவிலேயே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்றும் நாளையும் கனமழை
வங்கக்கடலின் தென்மேற்கில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
மேலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கனமழை பெய்யும்
அதாவது 30ஆம் தேதியான இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையிலிருந்து மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை, நாளை மறுநாள் கனமழை
அக்டோபர் 31ஆம் தேதியான நாளை தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூன்றாம் நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்துவாங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

5 நாட்களுக்கு வெளுக்கும்
நான்காம் நாளான நவம்பர் 2ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் நாளான நவம்பர் 3ஆம் தேதியும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications