Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெகன் மீண்டும் வெல்வது ரொம்பவே கடினம்.. காரணம் "அந்த" ஒரு தப்பு தான்! உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், அங்கே யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தலுடன் சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது.

Very slim chance for Jagan mohan reddy in Andhra says Prashant Kishor


அதன்படி நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருப்பதால் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆந்திரா: இரு தேர்தல்கள் நடைபெறுவதால் அரசியலில் சூடு பிடித்து இருக்கும் நிலையில், அங்கு இருக்கிறது. இதில் ஆந்திராவைப் பொறுத்தவரை இந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது தவிரக் காங்கிரஸ் கட்சியும் கூட அங்கே களத்தில் இருக்கிறது. தொடர்ந்து 2ஆவது முறையாக வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஜெகன்மோகன் ரெட்டி களமிறங்குகிறார்.

தேசியளவில் காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி? வந்து விழுந்த கேள்வி.. பிரசாந்த் கிஷோர் நறுக் பதில்


ஆந்திராவில் மீண்டும் ஜெகன்மோகன் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பேசிய கிஷோர், "தற்போதைய கள நிலவரத்தை வைத்துப் பார்க்கும் போது ஆந்திராவில் ஜெகன் மீண்டும் வெல்வது ரொம்பவே கடினம்" என்றார். கடந்த 2019ஆம் ஆண்டில் இதே ஜெகன்மோகன் ரெட்டி உடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் தேர்தலில் பணியாற்றினார். அப்போது தான் அவர் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார்.

பிரசாந்த் கிஷோர்: அப்படி இருக்கும் போதே அதே பிரசாந்த் கிஷோர் இந்தக் கருத்துகளைக் கூறுவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், பிரசாந்த் கிஷோரே ஏன் இந்தத் தேர்தலில் ஜெகன்மோகன் தோல்வியடைவார் என்பது குறித்தும் விளக்கி இருக்கிறார். அதில் அவர், "சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் செய்த தவறையே தான் ஜெகன்மோகன் ரெட்டியும் செய்து இருக்கிறார்.

என்ன காரணம்: மக்கள் கனவுகளை நிறைவேற்றுபவர் என்ற நிலையில் இருந்து மக்களுக்குத் தேவையானதை வழங்குபவர் என்ற நிலைக்கு ஜெகன் சென்றுள்ளார். அதாவது பழங்கால மன்னர்கள் எப்படி தங்கள் மக்களுக்கு உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்களோ அதுபோல.. அதைத் தாண்டி அவர் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

அதேபோல ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்கு நேரடியாகப் பல திட்டங்களில் பணத்தைக் கொடுத்தார். ஆனால் ஆந்திராவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல மாநிலத்தில் வளர்ச்சி தேக்கமடைந்து இருக்கும் நிலையில், அதைச் சரி செய்யவும் அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை.

ஆந்திர அரசியல்: ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 25 லோக்சபா இடங்கள் இருக்கின்றன. கடந்த முறை அங்கு ஜெகன் அலை வீசிய நிலையில், 22 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்றது. 3 இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் வென்றது. ஆனால், இந்த முறை அங்கே மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

சட்டசபையைப் பொறுத்தவரை ஆந்திராவில் மொத்தம் 175 இடங்கள் இருக்கிறது. கடந்த தேர்தலில் ஜெகன் கட்சி 151 இடங்களில் வென்று மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. தெலுங்கு தேசம் கட்சியால் வெறும் 23 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த முறை ஜெகனின் மேஜிக் ஒர்க் அவுட் ஆகாது என்றே பிரசாந்தி கிஷோர் கூறியிருக்கிறார். அங்கு லோக்சபா தேர்தலுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலும் வரும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+