மோடியிடம் மன்னிப்பு கேட்டீர்களா?- ஆமிர் கானிடம் விளக்கம் கேட்ட வி.எச்.பி.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு முன்னர், அவரை அவதூறாக பேசியதற்காக, ஆமிர் கான் மன்னிப்பு கோரினாரா என்று அவரிடம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது.
பாலிவுட் நடிகரான ஆமிர் கான் கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து விஷ்வ இந்து பரிஷத் விளக்கம் கோரி, நடிகர் ஆமிர் கானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான அசோக் சவுக்லே, "குஜராத்தில் 2005 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் நரேந்திர மோடிக்கு நேரடியாக தொடர்புடையதாக நடிகர் ஆமிர் கான் வெளிப்படையான கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால், இப்போது பிரதமராக பதவியேற்ற பின்னர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துள்ளார். பிரதமரை சந்திப்பதற்கு முன், தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆமிர் கான் மன்னிப்பு கோரினாரா? என்று விளக்கம் தர வேண்டும். அவரது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்த விவரம் எதுவும் இல்லை.
இதற்கு ஆமிர் கான் விளக்கம் தரவில்லை என்றால், அவர் பிரதமர் மோடி தலைமையிலான அரசிடமிருந்து தற்போது தனிப்பட்ட முறையில் ஏதேனும் நலனைப் பெற முயற்சிக்கிறார் என்று மக்களுக்கு தோன்றக்கூடும். இதற்கான பதிலை ஆமிர் கான் தான் கூற வேண்டும். இது தொடர்பாகவே ஆமிர் கானுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications