For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க கோரும் வி.ஹெச்.பி.!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவதில் மும்முரம் காட்டுகின்றன.

VHP to Fadnavis: ban loudspeakers in mosques

மும்பையில் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வெங்கடேஸ் அப்தியோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் மசூதிகளில் தொழுகையின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு மாநில அரசு தடை விதிக்க வேண்டும். ஆண்டுதோறும் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினால் சிலர் நீதிமன்றத்துக்குப் போய்விடுகின்றனர்.

மும்பை சித்தி விநாயகர் கோவில், ஸ்ரீரடி சாய்பாபா கோயில், பந்த்ராபூர் விட்டல் கோயில், துல்ஜா பவானி கோயில் ஆகியவற்றை இந்து அறக்கட்டளைகளிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பேஷன் ஷோக்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு வெங்கடேஸ் அப்தியோ தெரிவித்தார்.

English summary
Weeks after the Devendra Fadnavis government took steps to ban cow slaughter in the State, the Vishwa Hindu Parishad has stepped up its demand for the ban of loudspeakers in mosques across Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X