உலக யோகா தின நிகழ்ச்சி: அழைப்பு நிராகரிக்கப்பட்ட ஹமீத் அன்சாரியிடம் மன்னிப்பு கோரியது மத்திய அரசு..
டெல்லி : நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பபட்ட விவகாரத்தில் மத்திய அரசு மன்னிப்பு கேட்டு பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
பா.ஜ.க- வின் மூத்த தலைவர் ராம் மாதேவ், உலக யோகா தின நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்து கொள்ளாதது பற்றி ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் உலக யோகா தின நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்படவில்லை என்றும், முறையாக அழைக்கப்பட்டால் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை எனவும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், அன்சாரி புறக்கணிக்கப்பட்டதன் மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய இயற்கை மருத்துவத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதேவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications