For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரையை நிறுத்திட்டாங்களா?.. அட, ஆமாப்பா ஆமா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் தடைக்குப் பிறகு விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை புராக்டர் அண்ட் கேம்பிள் (பி&ஜி)நிறுவனம் நிறுத்தியுள்ளது.

பாராசிட்டமால்+பினைல்பிரைன்+கஃபைன் ஆகிய மூலப்பொருட்கள் அடங்கியவை ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகளாகும். இதுபோன்ற மருந்துகள் மீது மத்திய அரசு உடனடி தடை உத்தரவு பிறப்பித்ததால் விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டது.

Vicks Action 500 Extra sale stopped in India after ban

மார்ச் 10ம் தேதியன்று வெளியான அரசிதழ் அறிவிக்கையின்படி இருமல் மருந்தான குளோரோபினமின் மாலியேட்+கோடைன் சிரப் சேர்க்கை மருந்து வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

திங்களன்று ஃபைசர் மற்றும் அபாட் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது இருமல் மருந்தான கோரக்ஸ் மற்றும் பென்சிடில் ஆகியவற்றை முறையே விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்தி விட்டன.

இந்திய மருந்துச் சந்தைகளில் மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான சேர்க்கைகளில் மருந்துகள் புழங்கி வருவது பற்றி ஏற்கெனவே நிறைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 344 அதீத மருந்துக் கலவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
With the Indian Health Ministry banning around 350 fixed dose combination (FDC) drugs in the nation over safety concerns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X