துணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி.. ப.சிதம்பரத்திற்கு கெஜ்ரிவால் நன்றி
துணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் டெல்லி அரசு சார்பாக வாதாடியதற்காக, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் நேற்று இரவு சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: துணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் டெல்லி அரசு சார்பாக வாதாடியதற்காக, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் நேற்று இரவு சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் அதன் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை நிலவி வந்தது. முதல்வரின் வரம்பில் துணை ஆளுநர் ஈடுபட்டு பல நடவடிக்கை எடுத்தது பிரச்சனை ஆனது. இதனால் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.

அதன்படி டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. துணை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. அவர்களால் தன்னிச்சையாக செயல்படமுடியாது என்றுள்ளது.
இந்த வழக்கில், டெல்லி அரசு சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆஜராகி இருந்தார். அதேபோல் இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவான், சுப்பிரமணியம், ஆகிய வழக்கறிஞர்களும் ஆஜராகி இருந்தனர். துணை நிலை ஆளுநரின் செயலுக்கு எதிராக இவர்களே ஆதாரங்களை வழங்கியது.
இந்த நிலையில் வழக்கில் வென்றதற்காக, ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு நேற்று இரவு சென்று கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் மற்ற மூன்று வழக்கறிஞர்களையும் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications