சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த கட்டிடங்கள்.. நிமிடத்தில் ஒன்றுமில்லாமல் போன மலை.. வீடியோ
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் மிகமிக கனமழை பெய்த காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சீட்டு கட்டு போல் கட்டிடங்கள் சரிந்துவிழுந்த காட்சி காண்போரை நடுங்க வைத்துள்ளது. நல்ல வேளையாக அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்தேசம் இல்லை.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை வெளுத்து வாங்குகிறது. மேகவெடிப்பும் அதனை தொடர்ந்து கனமழையும், அதனால் நீர் அதிகமாகி மலைபகுதிகளில் நிலச்சரிவும் ஏற்படுகிறது. ஆறுகளில் அசாதாரண அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மிகப்பெரிய பேரிடரை இமாச்சல பிரதேசத்திற்கு தந்துள்ளது. பருவமழை காரணமாக கடந்த ஜூன் முதல் தற்போது 227 பேர் பலியாகி உள்ளனர். 38 பேர் காணாமல் போய் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை இமாச்சல பிரதேசம் சந்தித்துள்ளதால் இமாச்சல பிரதேசம் முழுவதும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு சார்பில் 10 கோடி ரூபாய் அறிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுவதால், அந்த மாநில மக்கள் என்ன செய்வது என்றே தெரியாத அளவிற்கு தவித்து வருகிறார்கள். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் 13000 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரையோரம் பாதிப்பு அதிகம் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால். இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சீட்டு கட்டு போல் கட்டிடங்கள் சரிந்துவிழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் நடுங்க வைத்தள்ளது. நல்ல வேளையாக அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்தேசம் ஏற்படவில்லை.
இதனிடையே இமாச்சல பிரதேசத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சீட்டுகட்டு போல் சரிந்து விழும் கட்டிடங்கள்
— Niranjan kumar (@niranjan2428) August 24, 2023
ஹிமச்சல் பிரதேசம்: குலு
இரு தினங்களுக்கு முன்பாகவே பொது மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு pic.twitter.com/31fqdlI2ie
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவு என்பது பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் உள் கிராம பகுதிகளை மோசமாக பாதித்துள்ளது. சுமார் 895 சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சாலைகளை சரிசெய்து போக்குவரத்தை சீரமைக்கவும், உடைந்த பாலங்களை சீரமைக்கவும், மக்களுக்கு நிரவாரணம் அளிக்ககவும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு முன்னுரிமை அளித்துள்ளார்.
இந்நிலையில் 2000 கோடி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இமாச்சல பிரதேச முதல்வர் சுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசோ, சாலைகளை புனரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், 830 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications