வா வந்து Pant ஐ துடைச்சிட்டு போ.. நடுரோட்டில் பெண் டிராஃபிக் போலீஸ் அட்டூழியம்.. வீடியோவால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

போபால்: பெண் டிராபிக் போலீஸ் ஒருவர் நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மோசமாக நடத்திய சம்பவம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Recommended Video

    வா வந்து Pant ஐ துடைச்சிட்டு போ.. நடுரோட்டில் பெண் டிராஃபிக் போலீஸ் அட்டூழியம்.. வீடியோவால் பரபரப்பு

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா பகுதி அதிக மக்கள் தொகை கொண்ட நெருக்கடி மிகுந்த இடமாகும். அங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்குள்ள ஸ்ரீமார் சாலை சந்திப்பில் டிராஃபிக் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பெண் போலீசார் ஒருவர் இளைஞர் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்டது வீடியோவாக வெளியாகி விமர்சனங்களை சந்தித்துள்ளது.

    டிராஃபிக் போலீஸ்

    டிராஃபிக் போலீஸ்

    டிராஃபிக்கை அந்த பெண் போலீஸ் அதிகாரி சரி செய்து கொண்டு இருக்கும் போது அவரின் மீது சேறு பட்டுள்ளது. அந்த வழியாக வேகமாக பைக்கில் வந்த ஒருவரால் போலீசின் உடையில் சேறு பட்டுள்ளது. அந்த பெண் போலீஸின் வெள்ளை நிற பேண்ட் இதனால் கறையாகி இருக்கிறது. இதையடுத்து கோபம் அடைந்த அந்த பெண் போலீஸ் ஓடிப்போய் அந்த பைக்கை மறித்து நிறுத்தினார்.

    போலீஸ் வீடியோ

    போலீஸ் வீடியோ

    ஆனால் அந்த நபர்தான் அந்த பெண் போலீஸ் அதிகாரி மீது சேறை இறைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கான வீடியோ ஆதாரங்கள் இல்லை. அந்த பைக்கை மறித்து பிடித்த அந்த பெண் போலீஸ், பைக்கில் இருந்தவர் தலையிலேயே தட்டி இருக்கிறார். சேற்றை வாரி இறைத்துவிட்டு அப்படியே போய் விடுவாயா? போலீஸ் இருப்பதை பார்க்க மாட்டியா என்று கேட்டு திட்டி இருக்கிறார்.

    டிராஃபிக் போலீஸ் மத்திய பிரதேசம்

    டிராஃபிக் போலீஸ் மத்திய பிரதேசம்

    அதோடு பலருக்கு முன்னில் அந்த நபரை போலீஸ் அதிகாரி மோசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். அதோடு நீதானே சேற்றை வாரி இறைத்து.. வா வந்து என்னுடைய பேண்ட் காலை சுத்தம் செய் என்று கூறியுள்ளார். அவமானத்தில் கூனிக்குறுகிய அந்த இளைஞர் எல்லோருக்கும் முன்னிலையில் அந்த போலீஸ் அதிகாரியின் பேண்டை துடைத்து இருக்கிறார்.

     போலீஸ் வீடியோ

    போலீஸ் வீடியோ

    அந்த பெண் போலீஸ் அதிகாரியின் பேண்டை இளைஞர் சுத்தமாக துடைத்த பின்பும் ஆத்திரம் குறையாத அவர்.. கடைசியாக அந்த இளைஞரை பொளேர் என்று அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று இருக்கிறார். அவமானத்தில் அந்த இளைஞர் கூனிக்குறுகி நிற்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் சஷி கலா என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அப்பகுதி கூடுதல் எஸ்பி சிவ் குமார் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+