"நீ எப்படி வெளிய போகலாம்!" நண்பருடன் டின்னர் சென்ற முஸ்லீம் பெண்ணை.. சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்
இந்தூர்: முஸ்லீம் பெண் ஒருவரைப் பல ஆண்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் வெளியே டின்னருக்கு சென்றுள்ளார். அந்த பெண் ஹிஜாப் அணிந்திருந்தார். டூ வீலரில் பின்னால் அமர்ந்திருந்த அந்த பெண்ணை ஆண்கள் சுற்றி வளைத்துக் கொண்டு மிரட்டியுள்ளனர்.

வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஆணுடன் எப்படி வெளியே செல்லலாம் என்று அவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அந்த பெண் தான் பெற்றோரின் அனுமதியைப் பெற்றே வெளியே வந்துள்ளதாகக் கூறுகிறார்.
வாக்குவாதம்: ஆனால், அதைக் கண்டுகொள்ளாத அந்த ஆண்கள் "முஸ்லீம் சட்டங்களை அந்த பெண் மீறிவிட்டதாகக் கூறி தொடர்ந்து திட்டுகிறார்கள். டின்னருக்கு வெளியே சென்றபோது திடீரென இப்படி சிலர் தனது டூவிலரை சுற்றி நின்றுகொண்டு பேசுவதைக் கண்டு வாகனத்தை ஓட்டிய பவேஷுக்கு பயமே வந்துவிட்டது.
அப்போது அவர்களின் ஒருவர், "கவலைப்பட வேண்டாம். நாங்கள் அடிக்க மாட்டோம். நாங்கள் அந்த பெண்ணிடம் பேச வேண்டும் அவ்வளவு தான்.. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் வெளியே செல்வதற்குப் பதிலாக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து இருக்கலாமே.. ஹிஜாபை அணிந்தாலும் நீங்கள் இஸ்லாத்திற்கான சட்டத்தைப் பின்பற்றவில்லை.
தாக்குதல்: இஸ்லாத்தைத் தாழ்த்தாதீர்கள். யாரும் உங்களை இஸ்லாத்தை வீழ்த்த அனுமதிக்க மாட்டார்கள்" என்று ஆவேசமாக அவர்கள் பேசுகிறார்கள். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் பவேஷை தாக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்குச் சலசலப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் வீடியோ தெளிவாக இல்லை. இருப்பினும், "அடிக்க வேண்டாம்" எனச் சிலர் கத்துவது தெளிவாகக் கேட்கிறது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து மத்தியப் பிரதேச போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளவர். மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்தூர் காவல்துறை ஆணையருக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.. அவர்கள் டின்னருக்கு சென்றுவிட்டுத் திரும்பும் போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசார் தகவல்: இது குறித்துக் கூடுதல் காவல் துணை ஆணையர் ராஜேஷ் சிங் ரகுவன்ஷி கூறுகையில், "பெற்றோரின் அனுமதியுடனேயே வெளியே வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இருப்பினும், முஸ்லிம் ஆண்கள் அவரது நண்பரை அடித்துள்ளனர். அவரை பாதுகாக்க அங்கிருந்த சிலர் முயன்ற போது அவர்களையும் தாக்கியுள்ளனர். கத்தியை வைத்தும் தாக்கியதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கத்தியால் தாக்கிய இருவரைக் கைது செய்துள்ளோம்" என்றார்.
இதில் அந்த மாணவரைக் காப்பாற்ற முயன்ற ஹிமான்ஷு படேல், அவரது நண்பர் யாஷ் ஜோஷி ஆகியோரையும் அவர்கள் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த பவேஷ் என்ற மாணவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications