விஜய் மல்லையா கர்நாடக மண்ணின் மகன், எங்கும் ஓடிப்போகவில்லை: கொதிக்கும் தேவகவுடா
பெங்களூர்: விஜய் மல்லையா கர்நாடக மண்ணின் மகன், அவர் நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்தார்.
வங்கிகளில் கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் மல்லையா, வெளிநாட்டுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். அவர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவரும் நிலையில், ஒரு தொழிலபர் என்ற முறையில் வெளிநாடு வந்துள்ளதாக மல்லையா தனது டிவிட்டர் அக்கவுண்ட் மூலமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மல்லையா குறிவைக்கப்படுவதாக கொதித்துள்ளார் தேவகவுடா. இதுபற்றி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தேவகவுடா அளித்த பேட்டியில், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு, விஜய் மல்லையா ஏற்கனவே பதிலளித்துவிட்டார்.
மல்லையா, கர்நாடக மண்ணின் மகன். நாட்டைவிட்டு அவர் எங்கும் ஓடவில்லை. இப்போதெல்லாம், ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவது சாதாரண விஷயம். மல்லையாவை குறிவைத்து பிரச்சினை கிளப்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதும், 2010 ராஜ்யசபா இடைத்தேர்தலின்போது, மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எம்.பியாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications