17 வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்த விஜய் மல்லையாவிடம் எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா?
டெல்லி: உலகின் பல்வேறு பகுதிகளில் அதுவும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் தொழில் அதிபர் விஜய் மல்லையா.
17 வங்கிகளில் சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காத தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிககள் வழக்கு தொடர்ந்துள்ளன. விஜய் மல்லையா தான் நல்ல நிலையில் இருந்தபோதே உலகின் பல்வேறு நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள டொனால்டு டிரம்புடனும் மல்லையா வியாபாரம் செய்துள்ளார். ஊர், உலகத்திற்கு தெரிந்து மல்லையாவிடம் உள்ள சொத்துகளின் பட்டியல் இதோ,

சாசாலிட்டோ, கலிபோர்னியா
மல்லையாவின் மனைவிக்கு பிரசவத்தில் பிரச்சனை இருக்கும் அதனால் இங்கேயே தங்கிவிடுங்கள் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில டாக்டர்கள் 1987ம் ஆண்டு தெரிவித்தனர். இதையடுத்து அவர் சாசாலிட்டோ பகுதியில் 11 ஆயிரம் சதுர அடியில் பங்களா ஒன்றை 1.2 மில்லியன் டாலருக்கு வாங்கினார்.

க்ளிப்டன் எஸ்டேட், கேப் டவுன்
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் 8.4 மில்லியன் டாலருக்கு ஒரு பெரிய பங்களாவை வாங்கினார். அந்த நகரிலேயே அது தான் சிறந்த பங்களாக என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. க்ளிப்டன் கடற்கரையை நோக்கியபடி இருக்கும் அந்த பங்களாவை அவர் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் விற்றுவிட்டார்.

டிரம்ப் பிளாசா, நியூயார்க்
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மல்லையா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் பிளாசாவில் இருக்கும் பென்ட் ஹவுஸை 2.4 மில்லியன் டாலருக்கு வாங்கினார். நியூயார்க்கிலேயே டிரம்ப் பிளாசாவில் உள்ள வீடுகள் தான் விலை உயர்ந்தவை. 37 அடுக்குமாடி குடியிருப்பான டிரம்ப் பிளாசாவில் டொனால்டு டிரம்ப், ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், பாடகி பியான்ஸே உள்ளிட்ட பிரபலங்கள் தங்கியுள்ளனர்.

லா கிராண்ட் ஜார்டின், பிரான்ஸ்
பிரான்ஸில் உள்ள லா கிராண்ட் ஜார்டின் சொத்தை மல்லையா கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாங்கினார். பிரபலங்கள், ரஷ்ய பெரும் பணக்காரர்கள் அதை வாங்க போட்டிபோட்டபோது அந்த சொத்து மல்லையாவுக்கு கிடைத்தது. லா கிராண்ட் ஜார்டின் செயின்ட் மார்கரீட் தீவில் உள்ளது. அதன் விலை 53 முதல் 61 மில்லியன் டாலர் ஆகும்.

இங்கிலாந்து
இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்போர்டுஷயரில் பெரிய வீடு ஒன்றை அண்மையில் வாங்கியுள்ளார் மல்லையா. மேலும் ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த்ஷயரில் பெரிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் மல்லையா. இது தவிர தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகர் அருகே மபுலா கேம் லாட்ஜில் மல்லையாவுக்கு 99.5 சதவீத பங்கு உள்ளது.

டெல்லி, மும்பை
டெல்லியில் உள்ள சர்தார் பட்டேல் மார்கில் மல்லையாவுக்கு பெரிய வீடு உள்ளது. தெற்கு மும்பையில் கடலை பார்த்தபடி பங்களா ஒன்றும் மல்லையாவுக்கு உள்ளது. அங்கு தான் கிங்ஃபிஷர் காலண்டர் அறிமுக பார்ட்டிகள் நடக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications