த்தூ....என பத்திரிகையாளர்களை காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் வருத்தம் தெரிவித்தார் விஜயகாந்த்!
பத்திரிகையாளர்களை காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் விஜயகாந்த் இன்று வருத்தம் தெரிவித்தார்.
டெல்லி: பத்திரிகையாளர்களை த்தூ... என காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வருத்தம் தெரிவித்தார்.
விஜயகாந்தைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து பேசுவதுதான் வழக்கம். டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க என ஒருமையில் விமர்சித்தார்.

காறி துப்பிய செயல்
பின்னர் நாயே என திட்டினார். இதேபோல் தன்னிலை மறந்தவராக 'த்தூ...' என காறி துப்பினார். விஜயகாந்தின் இந்த அநாகரீக செயல்கள் தொடர்பாக பிரஸ் கவுன்சிலுக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பிரஸ் கவுன்சில் வழக்கு
இதனையடுத்து பிரஸ் கவுன்சில் தாமாகவே முன்வந்து விஜயகாந்த் மீது வழக்குகள் பதிவு செய்தன. அத்துடன் இந்த வழக்கில் விஜயகாந்த் பதில் தரவும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு சாக்கு போக்கு பதிலையே விஜயகாந்த் தெரிவித்து வந்தார்.

டெல்லியில் விசாரணை
இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே. பிரசாத் முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது விஜயகாந்தின் வழக்கறிஞர் ஆஜரானார். இந்த விசாரணையின் போது, பத்திரிகையாளர்களை அவமதிக்கும் எண்ணம் விஜயகாந்துக்கு இல்லை.

வருத்தம் தெரிவித்த விஜயகாந்த்
விஜயகாந்த் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கப்படுவதாக வழக்கறிஞர் கூறினார். விஜயகாந்த் வருத்தம் தெரிவித்ததால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications