அடுத்த ஆளும் எஸ்கேப்... ரூ.800 கோடி லோன் வாங்கிவிட்டு வெளிநாடு பறந்த விக்ரம் கோதாரி.. யார் இவர்?
ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார்.
டெல்லி: ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார். இவர் தற்போது சுவிட்சர்லாந்து பறந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இப்போதுதான் நீரவ் மோடி 11,360 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரும் சுவிட்சர்லாந்து சென்று உல்லாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அடுத்த நபரும் வெளிநாடு சென்று இருப்பது அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. நீரவ் மோடி சம்பவம் வெளியே வந்த அதே நாளில்தான் இவரும் உஷாராகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

லோன்
ரோட்டோமாக் பென்ஸ் என்பது பிரபல எழுதுகோல் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இவர்களுக்கு நிறைய கிளை கம்பெனிகளும் இருக்கிறது. இதன் தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து உள்ளார். இதற்கான வட்டியோ, அசலோ ஒருவருடம் ஆகியும் கூட, 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை.

எந்தெந்த வங்கிகள்
இவர் மொத்தம் 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார். அலஹாபாத் வங்கியிடம் இருந்து 352 கோடி கடன் வாங்கியுள்ளார். பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர் சீஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் இருந்து 485 கோடி கடன் வாங்கி இருக்கிறார்.

இல்லை
இவர் சரியாக ஒருவருடமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தற்போது இவருடைய அலுவலகங்களும் பூட்டப்பட்டு இருக்கிறது. இவர் வீட்டுக்கு பூட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து டெல்லியில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

அதே நாள்
நீரவ் மோடி விவகாரம் வெளியே வந்த அதே நாளில் இவர் வெளிநாடு பறந்துள்ளார். இவரும் சுவிட்சர்லாந்து பறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications