மனைவியை அடித்து கொன்ற கணவன்.. ஆத்திரத்தில் கணவனை அடித்து கொன்ற கிராம பொதுமக்கள்
பீகாரில் மனைவியை கொன்ற கணவனை கிராம பொதுமக்கள் ஆத்திரத்தில் கணவனை அடித்துக்கொன்றனர்.
ரோடாஸ்: பீகார் மாநிலத்தில் மனைவியைக் கணவன் அடித்துக் கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டம், விஷ்ரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் நட்(48). இவருடைய மனைவி துர்காவதி தேவி(40). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த கோபால் நட் தனது மனைவியை ஒரு பெரிய கம்பால் தாக்கியுள்ளார்.

இதில், தலையில் படுகாயமடைந்த தேவி ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார். தேவியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு அருகிலுள்ள சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாலும், அதிக அளவில் ரத்தம் வெளியேறியதாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தேவியின் உயிரிழப்புக்கு காரணமான அவரது கணவன் கோபால் நட்டை அடித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கோபால் நட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், உயிரிழந்த கணவன் மனைவி இரண்டு பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
மனைவியை அடித்துக் கொன்ற கணவனை கிராம பொதுமக்கள் அடித்துக்கொன்ற இந்த சம்பவம் தொடர்பாக முஃபஸில் காவல் நிலைய போலீஸார் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications