இது குஜராத்தின் 'கொம்பன்..' ஒட்டுமொத்த கிராமத்தை அலறவிடும் ஒற்றை காளை.. மக்கள் போட்ட எஸ்கேப் பிளான்
காந்தி நகர்: மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது
நகரமயமாக்கல் அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு விலங்குகளும் மனிதர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு நிகழ்வுகளில் ரயில் உள்ளிட்ட வாகனங்கள் மோதி யானை போன்ற விலங்குகள் உயிரிழக்கும் சோகமான நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது.

குஜராத்
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இதுபோன்ற ஒரு சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. அங்கும் மனிதர்களுக்கும் மிருகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் விஷயம். ஆனால், அந்த விலங்கின் செயலைக் கண்டு அஞ்சி ஒட்டுமொத்த கிராமமே இரவு நேரத்தில் தங்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது? கிராமத்தையே தூங்க விடாமல் செய்யும் எந்த விலங்கு இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

ஒற்றை காளை
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள பத்ரா பகுதியில் அமைந்துள்ளது டப்கா கிராமம். இங்கு அமைந்துள்ள தாலியா பாதா என்ற பகுதியில் எப்போதும் கடுகடு முகத்துடன் காளை ஒன்று தன்னந்தனியாக சுற்றி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மக்களைத் தூங்கவிடாமல் அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்ரோஷமாக வீடுகளின் சுவர்களை முட்டுவது போன்ற செயல்கள் மூலம் கிராம மக்களை இது தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளது.

மரத்தில் ஏறிய மக்கள்
அவ்வளவு ஏன் சில சமயங்களில் அந்த காளை பொதுமக்களின் வீடுகளுக்குள் சென்றும் கூட தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் சரிவரத் தூங்க முடியாத நிலை கூட அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேறு வழியின்றி மரங்களின் மேல் தூங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காளைக்குப் பயந்து, கிராம மக்கள் தங்கள் கட்டில்களை மரங்களின் மீது வைத்து, இரவில் தூங்குகின்றனர்.

என்ன காரணம்
மாஹி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள திலியா பாதா என்ற இந்தப் பகுதியில் காட்டு விலங்குகள் பல காலமாக வாழ்ந்து வருகின்றன. இங்கு புல் உள்ளிட்ட தீவனம் நன்கு கிடைப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் இங்குத் தற்காலிக குடிசைகளை அமைத்துள்ளனர். இதனால் கோபமடைந்துள்ள அந்த காளை தான் கிராம மக்களைத் தூங்க விடாமல் அலறவிட்டு வருகிறது.

குறி வைத்துத் தாக்கும் காளை
இது குறித்து அங்கு வசிக்கும் நிதின் ஜாதவ் என்பவர் கூறுகையில், "கடந்த இரு வாரங்களில் மட்டும் அந்த காளை 3 முதல் 4 நபர்களைத் தாக்கியுள்ளது. அதேநேரம் அந்தக் காளை அனைவரையும் தாக்குவதில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே தாக்குகிறது. ஒருவேளை அந்தக்காளையை தொந்தரவு செய்பவர்களை மட்டும் அது குறி வைத்துத் தாக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications