போலீஸ் ஐஜி காரை தீ வைத்து எரித்த வன்முறை கும்பல்.. கர்நாடகாவில் பரபரப்பு
Recommended Video

பெங்களூர்: கர்நாடக மாநிலம் கும்டா பகுதியில் காவல்துறை ஐஜியை காருக்குள் வைத்து தீ வைத்து எரித்துள்ளனர் கலவரக்காரர்கள். அதிருஷ்வடசமாக அவர் தப்பினார்.
கர்நாடக மாநிலம், உத்தர் கன்னடா மாவட்டத்தின் கும்டா பகுதியை சேர்ந்த 19 வயது இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டதையடுத்து, அங்கு இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளன.
பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்தான் இந்த கொலைக்கு காரணம் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டு
காவல்துறை இதுவரை எந்த அமைப்பின் மீதும் வெளிப்படையாக சந்தேகம் வெளிப்படுத்தவில்லை. பிரேத பரிசோதனை முடிவுக்காக காவல்துறை காத்திருக்கிறது. ஆனால் இது பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செயல்தான் என பாஜக தலைவர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

பார்க்க சென்ற ஐஜி
இதையடுத்து கலவரம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கலவரத்தை அடக்க காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. நிலைமை கைமீறியதால், வன்முறை நடைபெறும் இடங்களை மேற்பார்வையிட மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ஹேமந்த் நிம்பால்கர் சென்றிருந்தார்.

காருடன் தீ வைப்பு
அப்போது கலவரக்காரர்கள், போலீஸ் அதிகாரி சென்ற இன்னோவா காருக்கு தீ வைத்தனர். இதையடுத்து, தக்க நேரத்தில், ஹேமந்த் நிம்பால்கர் மற்றும் காரில் இருந்த பாதுகாப்பு போலீசார் கீழே இறங்கி காயமின்றி தப்பிவிட்டனர். கார் முழுவதுமாக தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலவர பூமி
கடலோர கர்நாடக மாவட்டங்களான மங்களூர், உடுப்பி, உத்தர கன்னடா உள்ளிட்டவையும், ஷிமோகா, குடகு போன்ற மலை மாவட்டங்களும் மதக் கலவரங்களுக்கு பெயர் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications