பேருந்தில் கிண்டல் செய்த வாலிபரை நையப் புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்த பெண்: பரபர வீடியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் அரசு பேருந்தில் தன்னை கிண்டல் செய்த வாலிபரை பெண் ஒருவர் அடித்து நொறுக்கி அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
டெல்லியில் பெண் ஒருவர் தனியாக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் அவரை கிண்டல் செய்துள்ளார். வாலிபரின் தொல்லையை தாங்க முடியாத அந்த பெண் உதவிக்கு யாரையும் அழைக்கவில்லை. மாறாக தானே அந்த நபரை தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து நொறுக்கினார்.

அந்த பெண் தன்னிடம் பிரச்சனை செய்த வாலிபரை அடித்ததோடு விட்டுவிடாமல் பேருந்து ஓட்டுனரை வாகனத்தை காவல் நிலையத்திற்கு விடும்படி தெரிவித்தார்.
பின்னர் அவர் அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது.












Click it and Unblock the Notifications