சேட்டா.. எந்தா இது.. கோர்ட்டுக்குப் போகாமல்.. கேரளத்து கலகல போலீஸ் டிக்டாக்!
கைதியுடன் கேரள போலீசார் ஆடிய நடனம் வைரல் ஆகி வருகிறது
Recommended Video
சென்னை: யூனிபார்மில்.. டியூட்டி நேரத்தில்.. நடுரோட்டில்.. கைதியுடன் போலீஸ்காரர்கள் டிக்டாக்கில் டான்ஸ் ஆடி உள்ளார்கள்.
முதலில் இளைஞர்களைதான் இந்த டிக் டாக் ஆப் சுண்டி இழுத்தது. வர வர இந்த மோகம் பெரியவர்களையும் பிடித்து கொண்டுவிட்டது.
யார் வேண்டுமானாலும் ஆடலாம், பாடலாம், நடிக்கலாம் என தங்கள் ஆர்வத்தை காட்டி வருகிறார்கள். ஆனால் இதற்கு சில போலீஸ்காரர்களும் விதிவிலக்கு இல்லை போலும். தங்கள் கலைதாகத்தை அப்படியே பிழிந்து எடுத்துவிட்டார்கள். கேரளாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

4 போலீஸ்காரர்கள் ஒரு குற்றவாளியை கோர்ட்டு கொண்டுசெல்கிறார்கள். அப்படி செல்லும்போது அந்த குற்றவாளி திடீரென டான்ஸ் ஆடுகிறார். அப்போது ஒரு மலையாள பாட்டு பின்னால் ஒலிப்பது கேட்கிறது. இதை பார்த்து மிரண்டுபோனார்கள் போலீசார். எப்படியே கைதிக்கு செம கவனிப்புதான் என்று நாம் நினைத்தால், போலீஸ்காரர்களுக்கும் டான்ஸ் ஆடும் ஆர்வம் வந்துவிட்டது.
அதனால் ஆசையை அடக்க முடியாமல் கைதியுடன் சேர்ந்து 3 போலீசார் ஆட ஆரம்பித்துவிட்டனர். இதை மற்றொரு போலீஸ்காரர் வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சி வீடியோவாக ஒரு வாரத்துக்கும் மேலாக பரவி வருகிறது. ஆனாலும் இதனை நிறைய பேர் இப்போதும் ஷேர் செய்து வருகிறார்கள்.
அது மட்டுமில்லை, டான்ஸ் ஆடிவிட்டு, கோர்ட்டுக்கு செல்லும் வழியில் ஜீப்பில் உட்கார்ந்து பாட்டு பாடி வருகிறார்கள். நடுரோட்டில் போலீசாரே கைதியுடன் இப்படி டான்ஸ் ஆடலாமா? அதுவும் டியூட்டியில் இருக்கும்போது இப்படி செய்யலாமா என்று தாறுமாறாக கேள்விகள் எழுந்து வருகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications