மணப்பெண்ணுக்கு பாசிடிவ்.. கவச உடை அணிந்து தாலி கட்டிய மாப்பிள்ளை.. திருமண மண்டபமான கொரோனா மையம்!

ராஜஸ்தானில் கொரோனா மையத்தில் வைத்து நடைபெற்ற திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: திருமண நாளில் மணப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவிட் மையத்தில் கொரோனா கவச உடை (பிபிஇ)அணிந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவங்கிய கொரோனா பரவல் இன்னும் நிற்கவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா தாக்கத்தின் அளவு வெகுவமாக குறைந்திருந்தாலும் முழுமையாக ஓயவில்லை.

Viral video of Rajasthan couple getting married in PPE kits at Covid Centre

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரா எனும் ஊரில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு திருமண நாளில் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அதே ஊரில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தனது திருமண நாளில் இப்படி நேர்ந்துவிட்டதே என மிகுந்த கவலையில் ஆழ்ந்தார் அந்த பெண். இதை உணர்நத மணமகன் கொரோனா மையத்திலேயே திருமணம் செய்துகொள்வது என முடிவு செய்தார். இதையடுத்து அரசிடம் முறையான அனுமதி பெற்று கொரோனா மையத்திலேயே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Viral video of Rajasthan couple getting married in PPE kits at Covid Centre

மணமகன், மணப்பெண் மற்றும் புரோகிதர்கள் என முக்கியமானவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் பிபிஇ எனப்படும் கொரோனா கவச உடை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர். மணமக்கள் இருவரும் நீல நிற கவச உடையிலும், மற்றவர்கள் வெள்ளை நிற உடையில் இருந்தனர்.

Viral video of Rajasthan couple getting married in PPE kits at Covid Centre

புரோகிதர் மந்திரம் சொல்ல, மணப்பெண்ணை மணமுடித்தார் மணமகன். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் புதுமண ஜோடியை வாழ்த்தி வருகின்றனர். கொரோனா பிடியில் இருந்து மணப்பெண் கூடிய விரைவில் விடுதலையாகி, இல்லற வாழ்வில் சிறைபட நாமும் வாழ்த்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+