கல்யாணமான பெண்ணுடன் ரொம்ப நெருக்கம்.. இளைஞரை பிடித்து.. சிறுநீர் குடிக்க வைத்து.. அராஜகம்!

இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: கல்யாணம் ஆன பெண்ணுடன் இளைஞர் ஒருவருக்கு நெருக்கம் இருந்துள்ளது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஊர் மக்கள், அந்த இளைஞருக்கு சிறுநீர் தந்து வற்புறுத்தி குடிக்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் பகுதியில் ஒரு வீடியோ சில தினங்களாகவே வைரலாகி வந்தது.. இளைஞர் ஒருவரை சிலர் சூழ்ந்து கொண்டு அடித்து தாக்குகிறார்கள், பிறகு துன்புறுத்தி சிறுநீர் கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கிறார்கள்.. இந்த வீடியோ வெளியாகி பலரும் ஷேர் செய்தவாறே இருந்தனர்.

viral video: rajasthan youth forced to drink urine for being in relationship with a married woman

கடைசியில் ராஜஸ்தான் முதல்வரின் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றது.. இது சம்பந்தமான விசாரணை செய்யவும் உத்தரவு வெளியானது.. அதை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்தான் பல பகீர் தகவல்கள் வெளியாயின.

சிரோகி மாவட்டத்தில் பேவ் பலாடி என்ற கிராமத்தை சேர்ந்தவராம் அந்த இளைஞர்.. அவருடைய மாமா வீட்டுக்கு அடிக்கடி வந்து போயுள்ளார்.. அப்போதுதான் அதே பகுதியை சேர்ந்த மணமான பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. இவர்கள் நெருங்கிய பழகியது அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கு தெரிந்துவிட்டது. அந்த ஆத்திரத்தில் ஏற்கனவே அவர்கள் இருந்துள்ளனர் போலும்.

இந்த சமயத்தில்தான் வழக்கம்போல மாமா வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரை ஊர்மக்கள் சிலர் கடத்தி சென்றுள்ளனர்.. அவரை அடித்து உதைத்து சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். பிறகு அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த வீடியோவை ராஜஸ்தான் முதல்வர், முக்கிய அதிகாரிகள் சிலருக்கும் டேக் செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிரோகி மாவட்ட போலீஸார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.. 6 பேர் கைதாகி உள்ளனர்.. இந்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+