ஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் வந்த பிரச்சனை.. பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ்.. பரபர வீடியோ!
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மிக சிறிய இடைவெளியில் 170 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து இருக்கிறார்கள்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுள்ளது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது.
இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதற்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரே ஒரு சுவிட்ச்
இத்தனை பிரச்சனையும் ஒரே ஒரு சுவிட்ச் சரியாக வேலை செய்யாத காரணத்தால்தான் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் விமானிகள் இருக்கும் காக்பீட்டில் உள்ள கேபின் பிரஷர் கன்ரோலர் (அழுத்த கட்டுப்பாடு) சுவிட்சை போட்டு இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை நிகழ்ந்து இருக்காது என்று கூறப்படுகிறது. இதை போடாததால் உள்ளுக்கு உள்ள அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு மக்களுக்கு அதிக அழுத்தம் காரணமாக ரத்தம் வந்துள்ளது.
|
வீடியோ வைரல்
இந்த நிலையில் உள்ளே நடந்த விஷயம் அத்தனையும் வீடியோவாக பதிவாகி உள்ளது. அங்கு உள்ளே இருந்த பயணி ஒருவர் இந்த வீடியோவை படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
|
என்ன நடக்கிறது
இந்த வீடியோவில் பயணிகள் எல்லோரும் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டி இருக்கிறார்கள். உள்ளே ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்த காரணத்தால் இந்த மாஸ்க் மாட்டி இருக்கிறார்கள். இதில் மொத்தமாக 30 பேருக்கு காது, மூக்குகளில் ரத்தம் வந்தது குறிப்பிடத்தக்கது.
|
யாருக்கு
இதில் ரத்தம் அதிகமாக வந்தது சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும்தான் என்று கூறப்படுகிறது. சிறுவர்களுக்கு சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு ரத்தம் வந்ததை இவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு ஜெட் ஏர்வேஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications