"ஆல்-ரவுண்டர்கள்" கேப்டனாக விராட் கோலி செய்த முயற்சி.. அறுவடை செய்யும் ரோகித் ஷர்மா!

விராட் கோலி செய்த முயற்சிக்கு, ரோகித் சர்மா கேப்டன்சில் பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: பார்டர் - கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் சிக்கி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 400 ரன்களை எட்டி ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் இணைந்து 167 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் மற்றும் டெய்லண்டர்கள் இணைந்து 215 ரன்களை குவித்துள்ளனர். என்னதான் ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் எண்ணிலடங்காத முறை அடிவாங்கியுள்ளது என்றாலும், முதல்முறையாக ஸ்பின் ஆல் ரவுண்டர்களிடம் மறக்க முடியாத அடியை பெற்றுள்ளது.

ஆஸி.யின் வாய் ஜாலங்கள்

ஆஸி.யின் வாய் ஜாலங்கள்

ஒவ்வொரு முறையில் பார்டர் - கவாஸ்கர் டிராபி விளையாடுவதற்காக இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி, போட்டிகள் தொடங்குவதற்கு முன் "நாங்கள் யார் தெரியுமா? எங்களின் திறன் என்ன தெரியுமா? எங்கள் திட்டம் என்ன தெரியுமா?" என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெருமைப் பேசி நம்பிக்கை பெற்று கொள்வார்கள். இதற்கு இந்தியா தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாது.

ஜடேஜா, அஸ்வின், அக்சர்

ஜடேஜா, அஸ்வின், அக்சர்

எல்லாவற்றுக்கும் மொத்தமாக சேர்த்து இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுப்பார்கள். சுழல் பந்துவீச்சை சமாளிக்க தெரியாமல், ஆஸ்திரேலிய வீரர்களும் பிட்ச்சை குறை சொல்வார்கள். அது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள், நடப்பு தொடரில் பந்துவீச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் பேட்டிங்கிலும் சம்பவம் செய்திருக்கிறார்கள். இதுதான் பலருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளது.

அஸ்வின் பேட்டிங்

அஸ்வின் பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு கடந்த முறை இந்தியா பயணம் மேற்கொண்ட போது, உன் பந்துவீச்சில் எனக்கு சந்தேகமும் இல்லை. ஆனால் பேட்டிங் பயிற்சி எப்படி செல்கிறது? என்று அஸ்வினை பார்த்து விராட் கோலி கேட்டிருந்தார். ஆம், கேப்டனாக இருந்த போது சுழற்பந்துவீச்சாளர்கள் சிறிதளவு ரன்கள் சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் விராட் கோலி. ஏனென்றால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பேட்டிங் இந்திய அணிக்கு அத்தியாவசிய தேவையாக இருந்தது.

ஆல் ரவுண்டர்கள்

ஆல் ரவுண்டர்கள்

கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியின் டெய்லண்டர்களும் பேட்டிங்கில் கலக்க, இங்கிலாந்து பயணத்தின் போது அது உச்சம்பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் முகமது ஷமியும், பும்ராவும் செய்த சம்பவம் சர்வதேச கிரிக்கெட் ஆச்சரியப்படுத்தியது. அதன்பின்னர் டி20 கிரிக்கெட்டை போல் இந்திய அணியில் ஆடும் 11 வீரர்களில் 9 பேர் பேட்ஸ்மேன்கள் என்று சொல்ல வைத்தது. சுழற்பந்துவீச்சாளர்கள் நிச்சயம் ஆல்ரவுண்டர்களாக தரம் உயர வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டார் விராட் கோலி.

அறுவடை செய்யும் ரோகித் சர்மா

அறுவடை செய்யும் ரோகித் சர்மா

ஜடேஜா இல்லாத போது அக்சர் படேல் கொண்டு வந்ததற்கும் அவரது பேட்டிங் திறன் தான் காரணம். அக்சர் படேல் இல்லையென்றால், வாஷிங்டன் சுந்தர் கொண்டு வரப்படுவார். இனி வரும் காலங்களில் வெறும் சுழற்பந்துவீசினால் மட்டும் இந்திய அணியில் இடம்பெற முடியாது என்று மறைமுகமாக விராட் கோலி அறிவித்தார். விராட் கோலியின் முயற்சிக்கு, ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் பலன் கிடைத்துள்ளது. டாப் ஆர்டர் ஆட்டமிழந்தாலும், லோயர் ஆர்டர் ஒவ்வொரு முறையில் மெர்சல் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+