தெலுங்கானாவில் 68% வாக்குகள் பதிவு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது அரசை தீர்மானிக்கும் இன்றைய தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிகளவான வாக்காளர்கள் வாக்களித்தனர். இம்மாநிலத்தில் மாலை 4 மணிவரை நிலவரப்படி மொத்தம் 68% வாக்குகள் பதிவாகின.
ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தெலுங்கானா மாநிலம் வரும் ஜூன் மாதம் 2ந் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்க உள்ளது. அதேநாளில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது மாநில் அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்.
இந்நிலையில் தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகள் மற்றும் 17 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

2.81 கோடி வாக்காளர்கள்
தெலுங்கானாவில் 1.37 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட 2.81 கோடி பேர் வாக்காளர்கள்.
1669 வேட்பாளர்கள்
தெலுங்கானா சட்டசபைக்கு 1,669 வேட்பாளர்களும், லோக்சபா தொகுதிகளில் 265 வேட்பாளர்களும் இன்றைய தேர்தலை எதிர்கொண்டனர்.
யார் யாரிடையே போட்டி?
காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்), தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி ஆகிய பிரதான கட்சிகள் இடையேதான் கடும் போட்டி.
களத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியும்..
தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மஜ்லிஸ், ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் களத்தை எதிர்கொண்டன.
காஜ்வெலில் கே.சி.ஆர்.
காஜ்வெல் சட்டசபை தொகுதியில் கே.சந்திரசேகர ராவ் போட்டியிட்டார். மேலும் லோக்சபா தேர்தலிலும் அவர் போட்டியிட்டுள்ளார்.
யார் யார் பிரபலங்கள்?
மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, லோக் சத்தா கட்சித் தலைவர் என்.ஜெயபிரகாஷ் நாராயண், முன்னாள் டிஜிபி வி.தினேஷ் ரெட்டி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சாயா ரத்தன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.நாராயணா மற்றும் மஜ்லிஸ் தலைவர் அஸாசுதீன் ஓவைசி ஆகியோர் லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட பிரபலங்கள்.
முதல்வர் கனவு வேட்பாளர்கள்
சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்காக கனவு காணும் முன்னாள் ஆந்திர துணை முதல்வர் தாமோதர ராஜநரசிம்மா, முன்னாள் அமைச்சர் ஜே.கீதா ரெட்டி, நடிகை விஜயசாந்தி ஆகியோர் களத்தில் இருந்தனர்.
பாதுகாப்பு
தெலுங்கானாவில் நடைபெற்ற முதலாவது தேர்தல் என்பதாலும் மாவோயிஸ்டுகளால் தேர்தல் நடைமுறைகள் சீர்குலைக்கப்படும் என்ற அச்சத்தாலும் பாதுகாப்புப் பணியில் சுமார் 90,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
முற்பகல் 11 மணிவரை
பகல் 11 மணி வரை நிஜாமாபாத்- 38% , அடிலாபாத்- 34%, கரீம் நகர்- 32%, மேடக் 34%, கம்மம்- 37%, ரங்காரெட்டி- 26%, ஹைதராபாத்- 18%, மகபூப்நகர்- 36%, நலகொண்டா 23% வாரங்கல்- 37% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பகல் 1 மணி நிலவரப்படி..
இதன் பின்னர் பகல் 1 மணி நிலவரப்படி நிஜமாபாத் 57%, அடிலாபாத் 52%., கரீம்நகர்- 47%. மேடக்-53%., ரங்காரெட்டி- 40% ஹைதராபாத் 33%, மகபூப்நகர்- 51%, நலகொண்டா- 49%,. வாரங்கல்- 56%, கம்மம் -53% என வாக்குகள் பதிவாகின.
மாலை 3 மணி நிலவரம்
தெலுங்கானாவில் மாலை 3 மணி நிலவரப்படி மொத்தம் 60% வாக்குகள் பதிவாகின.
மாலை 4 மணி நிலவரப்படி..
தெலுங்கானாவில் மாலை 4 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications