ம.பி. வியாபம் விவகாரத்தில் தொடரும் மர்ம மரணம்-மத்திய அரசின் பார்வையாளர் ஒடிஷாவில் சடலமாக மீட்பு!
புவனேஸ்வர்: மத்திய பிரதேச தேர்வு வாரியமான வியாபம் விவகாரத்தில் மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது. வியாபம் தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக இருந்த விஜய் பஹதூர் ஒடிஷாவில் ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் வியாபம் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் நடத்திய தேர்வில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பலரும் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் உட்பட இதுவரை இவ்வழக்கில் தொடர்புடைய 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வியாபம் தொடர்பான தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக பணியாற்றிய விஜய் பஹதூர் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒடிஷாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான விஜய் பஹதூர் ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடாவில், ரயில்வே தண்டவாளம் அருகில் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பூரி-ஜோத்பூர் ரயிலில் தனது மனைவியுடன் அவர் பயணித்ததாக கூறப்படுகிறது.
FLASH: Vijay Bahadur,Former IFS and observer for recruitment tests found dead on a railway track in Jharsuguda(Odisha) #VyapamScam
— ANI (@ANI_news) October 17, 2015 இந்த மர்ம மரணம் குறித்து ஒடிஷா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த 2002-ம் ஆண்டு வியாபம் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நம்ரதா தமோர் என்ற மாணவரது சடலம் மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரின் அருகே ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications