இந்து அறநிலையத்துறையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: வக்பு கவுன்சில் மற்றும் வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரும் உறுப்பினராக நியமிக்கப்படுவர் என்ற மத்திய அரசின் புதிய வக்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத் துறையில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் முன்பாக தொடங்கியது.

இன்றய விசாரணையின் தொடக்கத்திலேயே, வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கை மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவது பற்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் வக்பு சட்டத்துக்கு தடை கோரும் வாதங்களை முன்வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, திமுகவின் வில்சன் உள்ளிட்டோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியது.
உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்:
- இந்துசமய அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் வக்பு வாரியம், வக்பு கவுன்சிலில் பிற மதத்தினரும் நியமிக்கப்படுவதாக சொல்கிறது புதிய வக்பு சட்டம். எதற்காக இந்த புதிய நடைமுறையை கொண்டுவர வேண்டும்? இந்து சமய அறநிலையத்துறையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா?
- 13,14,15-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பழமையான, தொன்மையான மசூதிகளுக்கு நிலப் பத்திரம் எதுவும் இருக்காது. புதிய வக்பு சட்டத்தினால் தொன்மையான, தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மசூதிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? தொல்லியல் சட்டத்தின் கீழ் இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
- வக்பு வாரிய சொத்துகள் அனைத்துமே தவறாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்படி சொல்லிவிட முடியும்?
- வக்பு வாரிய சொத்துகளில் 'பிரச்சனை- Dispute என எதனைக் குறிப்பிடுகிறது மத்திய அரசு
- வக்பு வாரிய சொத்துகள் குறித்த விவகாரத்தில் ஏன் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க முடியாது? ஏன் மாவட்ட ஆட்சியர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
- இடைக்கால உத்தரவுகள் அனைத்து நாளை வரை நிறுத்திவைக்கப்படும். நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெறும் போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
- வக்பு சொத்துகளை மாவட்ட ஆட்சியர் வகைப்படுத்தலாமே தவிர நடவடிக்கை மேற்கொள்ள கூடாது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications