அரைகுறை ஆடையில்.. அனுமன் சிலைக்கு முன்.. கொதிக்கும் காங்கிரஸ்.. பம்மிய பாஜக.. தலைகீழா இருக்கே
'பாடி பில்டிங்' ஷோ என்பதால் பெண்கள் டூ பீஸ் உடைகளை மட்டுமே அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சூழலில், அந்நிகழ்ச்சி மேடையில் இந்துக் கடவுள் அனுமனின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.
போபால்: அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிதான் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியை நடத்தியதே பாஜக என்பதுதான். இந்து மதக் கடவுளர்கள் குறித்து யாராவது ஏதேனும் பேசினால் கூட வரிந்துகட்டிக்கொண்டு போகும் பாஜகவே இப்படி செய்ததுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், பாஜகவும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

பெண்கள் 'பாடி பில்டிங்'
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரட்லாம் மாவட்டத்தில் பெண்களின் 'பாடி பில்டிங்' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ரட்லாம் தொகுதி பாஜக எமல்எல்ஏ சைதன்ய காஷ்யப், நகர மேயர் பிரகலாத் படேல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சேர்ந்து நடத்தினர். வெளிநாடுகளை சேர்ந்த பாடி பில்டிங் பெண்கள், உள்ளூர் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அனுமன் சிலை முன்பு "டூ பீஸ்"..
'பாடி பில்டிங்' ஷோ என்பதால் பெண்கள் டூ பீஸ் உடைகளை மட்டுமே அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சூழலில், அந்நிகழ்ச்சி மேடையில் இந்துக் கடவுள் அனுமனின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான தகவல் அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தெரியவரவே, அவர்கள் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு கூட்டமாக வந்தனர். பின்னர், நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறிய காங்கிரஸார், அங்கு கங்கை நதி தீர்த்தத்தை தெளித்தனர். மேலும், அனுமன் கட் அவுட்டுக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடத்திய பாஜகவினருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
இதையடுத்து, அங்கிருந்த அனுமன் கட் அவுட்டை காங்கிரஸார் கொண்டு சென்றனர். அவர்களை அங்கிருந்த பாஜகவினர் தடுக்க முயன்ற போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதால் பொதுமக்களும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரட்லாம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயங்க் ஜாட் கூறுகையில், "அனுமன் ஒரு கட்ட பிரம்மாச்சாரி என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது, அவரது கட் அவுட்டுக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வரும் நிகழ்ச்சியை நடத்தலாமா? இது வேண்டுமென்றே அனுமனை அவமதிக்கும் செயல். இதற்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், பாஜகவினரும் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட வேண்டும்" என்றார்.

மழுப்பும் பாஜக
இந்நிலையில், காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை மத்திய பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ஹிதேஷ் பாஜ்பாய் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "விளையாட்டுத் துறையில் பெண்கள் முன்னேறுவது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை. பெண்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கு பாஜக வாய்ப்பு வழங்குகிறது. இது பிடிக்காததால், வேண்டுமென்றே இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியல் ஆக்குகிறது" என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications