யூடியூப் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம்… உ.பி., யில் தாய், சேய் உயிரிழப்பு
கோரக்பூர்: உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் யூடியூப் வீடியோவை பார்த்து தனக்குத்தானே பிரசவம் பார்த்து கொண்ட இளம்பெண் அதிக ரத்தப்போக்கால் பரிதாபமாக உயிரிழந்தார்.
பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராவதற்காக கோரக்பூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அப்பெண் தங்கி இருந்த வீட்டில் இருந்து கதவுக்கு அடியில் ரத்தம் வெளியே வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

செல்போனில் வீடியோ
விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அப்பெண்ணும், பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையும் இறந்து கிடந்தனர். அவரது அறையில் கிடந்த செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுப்பது எப்படி? என்ற வீடியோ இருந்தது தெரியவந்தது.

திருமணமாகாத பெண்
இதனையடுத்து உடனடியாக இருவரையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருமணமாகாத அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.

தனக்கு தானே பிரசவம்
வீட்டிலேயே சுகபிரசவம் பார்க்க முடிவு செய்து இணைய தளத்தில் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார் என்பதும், இதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டது. பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்குபதிவு இல்லை
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உயிர் இழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்காததால் போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

திருப்பூர் ஆசிரியை
கடந்தாண்டு ‘யூடியூப்' வீடியோவை பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் திருப்பூரில் ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications