காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. கபினினியில் இருந்து 50,000 கன அடி நீர் திறப்பு!
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்கருந்து தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்கருந்து தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் ஆணை வேகமாக நிரம்பி வருகிறது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. கர்நாடக மாநிலம் பெரும்பாலான காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது.
கர்நாடகாவில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மேட்டூர் அணை 80 அடியை எட்டும் என கூறப்படுகிறது. அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications