Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயநாட்டில் பிரியங்கா காந்தி சாதனை தெரியும்.. தமிழ்நாட்டு சுயேச்சை வேட்பாளர்கள் செய்த சாதனை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வயநாடு: வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே வயநாடு தொகுதியில் தமிழ்நாட்டைச் சேந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி நிலையில், வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார்.

election results 2024 wayanad by election results priyanka gandhi

ராகுல் பதவி விலகியதால் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டன. வயநாடு தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 62.92 சதவீதம் வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே பிரியங்கா காந்தி முன்னிலை வகிக்க தொடங்கினார்.

கடந்த 2019, 2024 இரண்டு தேர்தல்களில் ராகுல் காந்தி வாங்கிய வாக்குகளை விட பிரியங்கா அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என வியூகம் அமைத்தனர். திட்டமிட்டபடியே காங்கிரஸ் வெற்றியும் பெற்றுவிட்டது. ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டார்.

அப்போது சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை (64.94 சதவீதம்) பெற்றார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி. 6.47 லட்சம் வாக்குகள் (59 சதவீதம்) வாக்குகளை பெற்றார்.

தற்போது பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகளை பெற்றார். ராகுல் காந்தி 2024 தேர்தலில் 3,62,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு சதவீதம் அடிப்படையில் 64.99 சதவீதம் வாக்கு பெற்றுள்ளார். இதுவும் கடந்த இரண்டு தேர்தல்களில் ராகுல் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம்.

களம் கண்ட முதல் தேர்தலிலேயே பிரியங்கா பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். அதே வயநாடு தொகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மராஜன், நூர் முகமது ஆகியோர் போட்டியிட்டனர். சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் தேர்தல் மன்னன் என்றழைக்கப்படுவார். எங்கு தேர்தல் நடந்தாலும் போட்டியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

கடைசியாக விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இதனுடன் அவர் 244 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அதேபோல கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது வயநாடு தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் 45முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் பத்மராஜன் 256 வாக்குகளும், நூர் முகமது 227 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர். இதன் மூலம் பத்மராஜன் போட்டியிட்ட 244 தேர்தல்களிலும் தோல்வியடைந்து தேர்தல் களத்தில் நூதன சாதனை படைத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+