இனிதான் ஆபத்து.. வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதிக்கு மீண்டும் எச்சரிக்கை
வயநாடு: வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய ரணங்கள் இன்னும் தீரவில்லை. மீட்புப் பணிகளும், அழுகுரல்களும் நிற்கவில்லை. இப்போதுதான் அந்த மக்கள் முகாம் வாழ்க்கையில் இருந்து சற்று மீண்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியில் இன்னும் ஆபத்து நீடிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, வெள்ளரிமலை கிராமங்களில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பேரிடர், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுமார் 100க்கும் மேற்பட்டவர்களின் நிலை, இப்போது வரை தெரியவில்லை. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மக்கள் அரசு இழப்பீடு கூட வாங்க வரவில்லை. அந்த கோர சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதும் மீட்புப் பணிகள் ஓயவில்லை. ஆங்காங்கே உடல் பாகங்களை மீட்கும் பணிகள் தொடந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.
மக்கள் முகாம்களில் இருந்து,கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். சொந்த வீட்டில் இருந்தவர்கள், வாடகை வீடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். "மீட்புப் பணிகள் எப்போது முடியும் என்று எங்களுக்கே தெரியவில்லை" என கேரளா பேரிடர் மீட்புப் படையினரே வேதனை தெரிவிக்கும் சூழ்நிலைதான் வயநாட்டில் நிலவி வருகிறது.
ஏற்கனவே, "புஞ்சரி மட்டம் என்ற கிராமம் மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடம்." என்று அந்த மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். இதேபோல சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை கிராமங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், "முண்டக்கை கிராமம் ஆபத்தில் இருந்து மீளவில்லை. இதன் பிறகும் அங்கு பேரிடர் நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது." என்று கேரள பேரிடர் மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.
இந்த நிலச்சரிவு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பாறை, மண், சேறு, மரங்கள் உள்ளிட்ட கழிவுகள் (Debris flow) அதிகளவு இருந்தது முக்கிய காரணம். கேரள பேரிடர் மேலாண்மை குழுவுடன், ஐஐஎஸ்இஆர் (Indian Institute of Science Education), கேரளா மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வு பல்கலைக்கழகம் ஆகிய குழு நவீன தொழில்நுட்பத்தில் உதவியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
"நிலச்சரிவின்போது குவிந்த ராட்சத பாறைகள், குப்பை கழிவுகள் இப்போதும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. இதனால் அடுத்து கனமழை பெய்யும்போது இது அதிக அபாயத்தை ஏற்படுத்தும். தற்போது வடகிழக்கு பருவ மழை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிலையில்லாமல் இருக்கும் பாறைகள், கழிவுகள் வெள்ளத்தில் பேரழிவை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
இப்போதே மழை சற்று அதிகம் பெய்தால், புன்னம்புழா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஆர்பரித்து ஓடுகிறது. அங்கு பாறைகள் அதிகம் இருப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது." என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
"இது நமக்கு விடுக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான எச்சரிக்கை." என்கிறார் கேரளா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை உதவிப் பேராசிரியர் சஜின் குமார். கனமழை ஏற்படும்போது இந்தப் பாறைகள் உருண்டு சென்று வயநாட்டில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். இது கடந்த 2020ம் ஆண்டு மூணார் பெட்டிமுடியில் ஏற்பட்டதை விட 300 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தளவுக்கு ராட்சத பாறைகளும், கழிவுகளும் அந்த இடத்தை மண்ணோடு மண்ணாக்கிவிட்டது.
இதன் காரணமாக தான் இந்திய வரலாற்றிலேயே மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலச்சரிவு என இதை குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வயநாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications