லோக்சபா தேர்தல்: மே. வங்கத்தில் திரிணாமுல் காங். 20-28; இடதுசாரிகள் 7-13- கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெற்றால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 20 முதல் 28 இடங்களைக் கைப்பற்றும் என்று ஐபிஎன் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சி.என்.என்.ஐபிஎன் தொலைக்காட்சி பல கட்ட கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மாநிலங்கள் வாரியாக ஐபிஎன் நடத்திய கருத்து கணிப்பில் மேற்கு வங்கத்தில் 20 முதல் 28 இடங்கள் வரை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்கள்?

கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்கள்?

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்கள் எத்தனை?

திரிணாமுல் காங்கிரஸ்: 20-28, இடது முன்னணி: 7-13, காங்கிரஸ்: 5-9, பாஜக: 0-2

கட்சிகளுக்கான வாக்கு சதவீதம்?

கட்சிகளுக்கான வாக்கு சதவீதம்?

லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் மேற்கு வங்கத்தில் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் எவ்வளவு?

காங்கிரஸ்- 19%, பாஜக-14%, திரிணாமுல்-33%, இடதுசாரிகள்- 25%, ஆம் ஆத்மி-2%

திரிணாமுல் அரசு செயல்பாடு பற்றி..

திரிணாமுல் அரசு செயல்பாடு பற்றி..

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடு குறித்து 55% பேர் திருப்தியும் 34% பேர் அ திருப்தியும் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு செயல்பாடு பற்றி..

மத்திய அரசு செயல்பாடு பற்றி..

மத்திய அரசின் செயல்பாடு பற்றிய கேள்விக்கு மேற்கு வங்க மாநிலத்தில் 39% அதிருப்தியும் 35% திருப்தியும் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன்சிங் செயல்பாடு குறித்து

மன்மோகன்சிங் செயல்பாடு குறித்து

பிரதமர் மன்மோகன்சிங் செயல்பாடு குறித்து மேற்கு வங்கத்தில் 39% திருப்தியும் 38% பேர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

யார் பிரதமராக வேண்டும்?

யார் பிரதமராக வேண்டும்?

பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கு

மோடி- 18%, ராகுல்- 9%, சோனியா-3%, மன்மோகன்சிங்- 5%, மமதா பானர்ஜி - 11%, புத்ததேவ்- 3% பேர் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+