பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை.. தம்பிதுரை தடாலடி!
பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகள் பங்கேற்கின்றன. திமுக சார்பாக டிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பாக தம்பிதுரையும் பங்கேற்றனர்.

தம்பிதுரை
டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.

ஒரு பெயர்கூட விடுபடக்கூடாது
அப்போது கூறியதாவது, அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியலில் தகுதியான ஒருவர் பெயர்கூட விடுபடக்கூடாது என கோரினோம்.

கூட்டணியில் இல்லை
வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டால் அதிமுகவுக்கு ஆட்சேபனை இல்லை. மேலும் அதிமுக - பாஜக கூட்டணியில் இல்லை.

அதிமுகவுக்கு கவலையில்லை
பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார். சென்னையில் 30 ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில் தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications