வெறுப்பை விதைத்ததால் பாஜக தோல்வி... அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்
போபால்: மக்களுக்கு வெறுப்பையும், ஏமாற்றத்தையும் அளித்ததால் பாஜக தோல்வியடைந்திருப்பதாக உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய பிரதேசத்தில் மக்கள் அளித்த ஆணையை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் நன்றாக செயல்படவில்லை, ஆனால் எங்களுக்கு ஆதரவளித்த மத்தியப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். மக்களிடம் வெறுப்பையும், ஏமாற்றத்தையும் அளித்ததால் தான் பாஜக தோல்வியை தழுவியதாக தெரிவித்தார். மேலும், லோக்சபா தேர்தலில் பாஜக பதிலளிக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், 114 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு, ஆட்சி கட்டிலில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்று 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆதரவளித்துள்ளது. அதே போல், ஒரு இடத்தில் வென்ற சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது.












Click it and Unblock the Notifications